X தளத்தில் ஆபாசக் காணொளிகள் - நாடுகள் கண்டனம்

AP/Rick Rycroft
X தளம் ஆபாசக் காணொளிகளை அதிகாரபூர்வமாக அனுமதிக்க முடிவு செய்திருக்கிறது.
அதைப் பல நாடுகள் கண்டிக்கின்றன.
Twitter என்று முன்பு அழைக்கப்பட்ட X தளத்தில் ஆபாசக் காணொளிகளுக்கு எதிராகக் கொள்கை எதுவும் இதுவரை இருந்ததில்லை.
அதுபோன்ற காணொளிகள் இடம்பெற்று வந்ததாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் X தளம் காணொளிகளுக்கு அதிகாரத்துவமாக அனுமதி வழங்குகிறது.
சம்மதத்துடன் எடுக்கப்படும் காணொளிகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று X சொன்னது.
18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டும் அவற்றைக் காணத் தடை விதிக்கப்படும்.
புதிய அறிவிப்பினால் சில நாடுகள் கோபம் அடைந்துள்ளன.
இந்தோனேசியா, மலேசியா போன்ற தென்கிழக்காசிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
Xஇன் கொள்கை உள்நாட்டுச் சட்டங்களை மீறுவதாக அந்த நாடுகள் கூறின.
X சட்டங்களுக்குக் கட்டுப்படவில்லை என்றால் அந்தத் தளம் தடைசெய்யப்படலாம் என்று
இந்தோனேசிய தொடர்பு, தகவல் அமைச்சர் சொன்னார்.
மலேசியாவும் அதன் கண்டனத்தை முன்வைத்தது.
ஆபாசக் காணொளிகள் தொடர்பான சட்டத்தை வலியுறுத்தப் போவதாக மலேசியத் தொடர்புத்துறை அமைச்சர் கூறினார்.