Skip to main content
சுனாமியா? மேகமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சுனாமியா? மேகமா?

வாசிப்புநேரம் -
போர்ச்சுகலில் கோடைக்காலம்...

கடற்கரைகளில் இளைப்பாற ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

திடீரென்று தோன்றியது 'ராட்சத அலை'!

அதைப் பார்ப்பதற்குச் சுனாமியைப் போல் இருந்தது...

ஆனால் 'அலை' சற்றும் நகரவில்லை...

அது உண்மையில் வெறும் மேகம் என்று அறிந்தனர் மக்கள்!

கடற்கரைகளில் இருந்த பலர் காட்சியைக் கண்டு வியந்தனர்.

அவர்கள் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்த படங்களும் காணொளிகளும் பரவலாகப் பகிரப்பட்டன.

'Roll cloud' எனப்படும் அரிய மேகம் குளிரான காற்றும் வெப்பமும் கலக்கும்போது உருவாகிறது.

அது பொதுவாகப் பெரிதாகத் தோன்றும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (29 ஜூன்) தோன்றிய காட்சி செயற்கைக்கோள் வழியும் காணப்பட்டது.

மறுநாள் போர்ச்சுகலில் 46.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

அதுவே ஜூன் மாதத்தில் பதிவான ஆக அதிகமான வெப்பநிலை என்று அதிகாரிகள் கூறினர்.
ஆதாரம் : AP

மேலும் செய்திகள் கட்டுரைகள்