Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கக் கடன் உச்சவரம்பை உயர்த்தும் பேச்சுவார்த்தைகள் - சாதகமான நிலை

வாசிப்புநேரம் -
அமெரிக்கக் கடன் உச்சவரம்பை உயர்த்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் சாதகமான நிலை தென்படுகிறது.

கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு இன்னும் ஒரு வாரத்திற்கு குறைவான காலமே இருக்கும் வேளையில் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஜனநாயக, குடியரசுக் கட்சிகளின் பிரதிநிதிகள் விரைவில் ஒர் ஒப்பந்தத்தை எட்டக்கூடும் என வெள்ளை மாளிகை கூறியது.

புதிய ஒப்பந்தம் கடன் உச்சவரம்பை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு உயர்த்தும் என்றும் ராணுவத்தைத் தவிர மற்ற செலவினங்கள் கட்டுப்படுத்தப்படும் என்றும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் சொன்னது.

உள்நாட்டு வருவாய்ச் சேவைக்கான நிதியைப் பெருக்குவது குறித்தும் இரு தரப்பினரும் பரிசீலிப்பதாகத் தெரிகிறது.

31.4 டிரில்லியன் டாலர் கடன் உச்சவரம்பை நான்கு மாதங்களுக்கு முன்பே அமெரிக்கா தொட்டுவிட்டது.

இருப்பில் உள்ள நிதி ஜூன் முதல் தேதிக்குள் தீர்ந்துவிடும் என மதிப்பிடப்படுகிறது.

அண்மைக் கருத்துக்கணிப்பில் முன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் நாடு கடனைத் திரும்பச் செலுத்தத் தவறிவிடும் என்றும் இதனால் 8 மில்லியன் வேலைகள் பாதிக்கப்படலாம் என்றும் அஞ்சுவதாகத் தெரியவந்துள்ளது.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்