Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

விமானத்தில் பெட்டி வைக்கும் இடத்தில் இனி power bank சாதனத்தை வைக்கக்கூடாது: Air Busan

வாசிப்புநேரம் -

விமானத்தில் இருக்கைகளுக்கு மேல் பெட்டி வைக்கும் இடத்தில் power bank எனும் மின்னூட்டம் செய்யும் சாதனங்களை இனி வைக்கக்கூடாது என்று Air Busan நிறுவனம் கூறியுள்ளது.

பயணிகள் தங்கள் கைகளில் உள்ள பைகளில் மட்டுமே சாதனங்களை வைத்துக்கொள்ளலாம். 

அப்படிச் செய்வதால், கைத்தொலைபேசிகளுக்கு மின்னூட்டும் power banks கையடக்கச் சாதனங்கள் தீப்பிடித்தால் அதை விரைவில் அணைக்க முடியுமென Air Busan சொன்னது.

power banks சாதனங்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக நிறுவனம் கூறியது.

தீப்பிடிக்கும் சாதனங்களைக் கையாள சிப்பந்திகளுக்குப் பயிற்சி வழங்கப்படுவதாக அது தெரிவித்தது.

கடந்த மாதம் 28ஆம் தேதி தென் கொரியாவிலிருந்து ஹாங்காங்கிற்குப் புறப்படவிருந்த விமானம் தீப்பற்றிக் கொண்டது.

விமானத்திலிருந்து அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 

தீ எப்படி ஏற்பட்டது என்று இன்னும் தெரியவில்லை. 

இருக்கைகளுக்கு மேல் பெட்டி வைக்கும் இடம் தீப்பற்றிக்கொண்டதாக நம்பப்படுகிறது.

ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்