அதிபரின் உரையாடலை ஒட்டுக்கேட்டதாகச் சந்தேகம் - தலைமையதிகாரி பதவி நீக்கம்
படம்: AFP
This audio is generated by an AI tool.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ (Prabowo Subianto) தமது அலுவலகத்தின் தலைமையதிகாரியைப் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார்.
அதிபர், மற்ற முக்கியப் பிரமுகர்கள் ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களை அந்த அதிகாரி ஒட்டுக்கேட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அந்தச் செயல் நாட்டு நிந்தனையாக இருக்கக்கூடும் என்றும் நாட்டின் பாதுகாப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அதிபரின் பேச்சாளர் தெரிவித்தார்.
அதிபர் அலுவலகத் தலைமையதிகாரியும் காவல்துறையின் மூத்த அதிகாரிகள் வேறு இருவரும் நேற்றுத் தடுத்து வைக்கப்பட்டனர்.
2025க்கும் 2026க்கும் இடைப்பட்ட காலத்தில் உரையாடல்களை ஒட்டுக்கேட்ட குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
விவகாரம் குறித்து அதிபர் பிரபோவோ கவலை தெரிவித்திருக்கிறார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூவருக்கும் பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
அவர்கள் தற்போது தேசியக் காவல்துறைத் தலைமையகத்தின் தடுப்புக்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.