ஈரானும் இஸ்ரேலும் 12 மணிநேர சண்டை நிறுத்தத்திற்குச் சம்மதம்: டிரம்ப்
வாசிப்புநேரம் -

(படம்: CHIP SOMODEVILLA / GETTY IMAGES NORTH AMERICA / AFP)
ஈரானும் இஸ்ரேலும் முழுமையான சண்டை நிறுத்தத்துக்கு இணங்கியிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
அடுத்த சில மணி நேரத்தில் அது நடப்புக்கு வரும் என்றார் அவர்.
கத்தாரில் உள்ள அமெரிக்க ஆகாயப் படைத்தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்திய பிறகு அந்தத் தகவல் வெளிவந்திருக்கிறது.
சண்டை நிறுத்தம் ஈரானிலிருந்து தொடங்கும்; இஸ்ரேலும் அதைத் தொடரும்; 24ஆவது மணி நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் "12 நாள் போர்" அதிகாரபூர்வமாக முடிவுக்கு வரும் என்றார் திரு டிரம்ப்.
கத்தாரின் சமரச முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த உடன்பாட்டை தெஹ்ரான் ஒப்புக்கொண்டதை ஈரான் அதிகாரி ஒருவர் உறுதி செய்திருப்பதாக ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஆதாரம் : Reuters