இந்தியா - வியட்நாம் வர்த்தகம், தற்காப்புத் துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பு
வாசிப்புநேரம் -
படம்: Sajjad HUSSAIN / AFP
இந்தியாவும் வியட்நாமும் வர்த்தகம், தற்காப்பு ஆகிய துறைகளில் மேலும் நெருக்கமான ஒத்துழைப்பைக் கொண்டிருக்க எண்ணுகின்றன.
வியட்நாமிய அதிபர் தோ லாம் (To Lam) இன்று புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவிருக்கிறார்.
இருநாடுகளும் தங்கள் உறவை விரிவான உத்திபூர்வப் பங்காளித்துவ நிலைக்கு உயர்த்தி 10 ஆண்டுகள் ஆகின்றன.
அதிபராகப் பதவியேற்ற பின்னர் திரு லாம் மேற்கொள்ளும் இரண்டாவது அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணம் இது.
கடந்த மாதம் திரு லாம் சீனாவுக்குச் சென்றிருநதார்.
திரு மோடியும் திரு லாமும் பல்வேறு அனைத்துலக, வட்டார விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடுவர்;
இருதரப்பு ஒத்துழைப்புக்கான புதிய வழிகளும் ஆராயப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆதாரம் : AFP