Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனாஸ் தம்பதிக்கு முதல் குழந்தை

வாசிப்புநேரம் -

பிரபல நட்சத்திர தம்பதி பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ் (Nick Jonas) தங்களது முதல் குழந்தையை வரவேற்றுள்ளனர்.

அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றுக்கொண்டுள்ளதாக தங்களது Instagram பக்கத்தில் நேற்று தெரிவித்தனர்.

"குழந்தை குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்தச் சிறப்பான தருணத்தில் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறோம்.எங்கள் அந்தரங்கத்தை மதிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம்."

குழந்தையின் பெயரையோ, குழந்தை ஆணா, பெண்ணா என்பது பற்றிய தகவல்களையோ அவர்கள் வெளியிடவில்லை.

39 வயது சோப்ரா, 29 வயது ஜோனாஸ் இருவரும் 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

ஆதாரம் : Others/CNN

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்