Skip to main content
தேர்தல் முறையில் Proportional Representation
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தேர்தல் முறையில் Proportional Representation - அப்படியென்றால் என்ன?

வாசிப்புநேரம் -
தேர்தல் முறையில் Proportional Representation - அப்படியென்றால் என்ன?

படம்: AP/David Goldman

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இஸ்ரேலியப் பொதுத்தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் 120 இடங்கள் இருக்கின்றன. பெரும்பான்மையைப் பெற 61 இடங்களைக் கைப்பற்றவேண்டும்.

பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு தலைமையிலுள்ள கூட்டணிக்கு 53 இடங்கள் கிடைத்தன.

அவரை எதிர்த்து நிற்கும் முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட்டின் (Gadi Eisenkot) கூட்டணிக்கு 48 இடங்கள்.

மீதமுள்ள அரபுக் கட்சிகள் 19 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

இதற்கு என்ன காரணமாக இருக்கலாம்?

இஸ்ரேலில் proportional representation எனப்படும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை பயன்படுத்தப்படுகிறது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவம் என்றால் என்ன?

தேர்தலில் ஒரு கட்சி மொத்த வாக்குகளில் எத்தனை விழுக்காட்டு வாக்குகளை வென்றிருக்கிறதோ, அந்த விழுக்காட்டுக்கு ஏற்றவாறு நாடாளுமன்றத்தில் இடங்கள் ஒதுக்கப்படும்.

அதாவது கட்சி 30 விழுக்காட்டு வாக்குகளை வென்றால் நாடாளுமன்றத்தில் 30 விழுக்காட்டு இடங்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும்.

இதனால் எந்தவொரு கட்சியாலும் பெரும்பான்மை பெறுவது கடினம்.

பொதுவாகக் கட்சிகள் கூட்டணியை அமைத்து அரசாங்கத்தை உருவாக்கும்.

கூட்டணி உடைந்தால் மீண்டும் தேர்தலை நடத்தவேண்டியிருக்கும்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்