'புஷ்பா 2' திரைப்படம் பார்க்கச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் மிதிபட்டு மரணம்
வாசிப்புநேரம் -

(படம்: Pexels)
இந்தியாவின் ஹைதராபாத்தில் (Hyderabad) 'புஷ்பா 2' திரைப்படத்தைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் மிதிபட்டு மாண்டார்.
அவரது மகன் கூட்ட நெரிசலில் காயமுற்றார்.
மகன் தற்போது தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நேற்று (4 டிசம்பர்) Sandhya எனும் திரையரங்கில் நடந்ததாக Times of India நாளேடு குறிப்பிட்டது.
திரையரங்கின் மீதும் நிர்வாகத்தின் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
மேல் விசாரணைக்காகத் திரையரங்கு தற்காலிகமாக மூடப்படும் என்றும் காவல்துறை சொன்னது.
திரையரங்கு கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் Times of India நாளேட்டிடம் கூறினர்.
சுகுமாரின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.
புஷ்பா ஒன்றின் வெற்றியைத் தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
ஒரு சாதாரண ஊழியராக இருந்த புஷ்பராஜ் என்பவர் சந்தனக் கடத்தல் உலகில் முக்கிய நபராக மாறுகிறார். அதனை மையமாக வைத்துப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
படம் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கிறது.