உக்ரேனிடமிருந்து கைப்பற்றப்பட்ட மரியுப்போல் நகரத்துக்குத் திடீரெனச் சென்ற ரஷ்ய அதிபர்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின். படம்: AFP/Michael Klimentyev
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் துறைமுக நகரமான மரியுப்போலுக்குத் திடீர் வருகை தந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மரியுப்போல் நகரத்தை உக்ரேனிடமிருந்து கைப்பற்றிய பிறகு அதிபர் புட்டின் அங்கு முதன்முறையாகச் சென்றிருக்கிறார்.
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் (ICC) திரு. புட்டினுக்கான கைதாணையை அறிவித்ததையடுத்து, அவர் அந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
சென்ற ஆண்டு பிப்ரவரி (2022 பிப்ரவரி) மாதம் உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துதது. போரின் முதற்கட்டத்தில் ரஷ்யா மரியுப்போலைத் தாக்கிக் கைப்பற்றியது.
திரு. புட்டின் மரியுப்போலுக்கு ஹெலிகாப்டரில் சென்றிருந்ததாகவும் காரில் நகரத்தைச் சுற்றிப் பார்த்ததாகவும் TASS செய்தி நிறுவனம் தெரிவித்தது.
மரியுப்போலிலுள்ள சில பகுதிகளுக்குச் சென்று அங்கிருக்கும் குடியிருப்பாளர்களிடமும் திரு. புட்டின் பேசினார்.
நகரத்தின் சீரமைப்புப் பணிகள் குறித்தும் அவர் விவரம் பெற்றார்.