Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகின் ஆக நீண்ட நேரடி விமானச் சேவையை அறிமுகம் செய்யும் Qantas

வாசிப்புநேரம் -
உலகின் ஆக நீண்ட நேரடி விமானச் சேவையை அறிமுகம் செய்யும் Qantas

(படம்: Wendell TEODORO / AFP)

உலகின் ஆக நீண்ட விமானச் சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக Qantas நிறுவனம் அறிவித்துள்ளது.


19 மணி நேரம் நீடிக்கக்கூடிய அந்த விமானச் சேவை சிட்னியிலிருந்து லண்டனுக்குச் செல்லும் பயணங்களுக்கு வழங்கப்படும்.


பின்னர் மெல்பர்ன் நகருக்கும் சேவை வழங்கத் திட்டம் இருப்பதாக நிறுவனம் கூறியது.



புதிய சேவை 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதை முன்னிட்டு, Airbus A350-1000 ரகத்தைச் சேர்ந்த 12 விமானங்களுக்கு முன்பதிவு செய்துள்ளதாக Qantas சொன்னது.


ஒரு விமானத்தில் 238 பயணிகள் வரை செல்லலாம்.

first-class பிரிவுப் பயணிகளுக்குப் படுக்கை, சாய்ந்துகொள்ளும் இருக்கைகள், அலமாரி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும்.

Qantas தற்போது 17 மணி நேரம் நீடிக்கக்கூடிய விமானச் சேவையை வழங்குகிறது.

அது பெர்த் நகரையும் லண்டனையும் இணைக்கிறது.

Singapore Airlines நிறுவனமே தற்போது உலகின் ஆக நீண்ட நேரடி விமானச் சேவையை வழங்குகிறது.

18 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கக்கூடிய பயணத்தில், சிங்கப்பூரிலிருந்து நியூயார்க் செல்லலாம்.
 

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa