கத்தார், அபு தாபி F1 பந்தயங்கள் திட்டமிட்டபடியே நடக்கும்
வாசிப்புநேரம் -
படம்: REUTERS/Jakub Porzycki
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்தாலும் கத்தார், அபு தாபி Formula One (F1) கார்ப் பந்தயங்கள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் போட்டி அடுத்த மாதம் 29ஆம் தேதியும், அபு தாபி போட்டி டிசம்பர் 6ஆம் தேதியும் நடைபெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
ஈரான் போர் காரணமாக பஹ்ரேனிலும் சவுதி அரேபியாவிலும் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.
பஹ்ரேன் பந்தயம் மலேசியாவுக்கு மாற்றப்பட்டது.
அது இவ்வார இறுதியில் மலேசியாவின் செப்பாங் (Sepang) பந்தயத் தடத்தில் நடைபெறுகிறது.
அபு தாபியில் நடக்கவிருக்கும் போட்டிக்கு ரசிகர்கள் வரவேற்பு அமோகமாய் இருப்பதாக F1 தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.
ஏற்கனவே 99 விழுக்காட்டு நுழைவுச்சீட்டுகள் விற்றுதீர்ந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் கத்தார், அபு தாபி ஆகிய இடங்களில் F1 போட்டியை நடத்த பந்தய வீரர்கள் சிலருக்கு நாட்டம் இல்லை.
வட்டாரத்தில் போர் தொடரும் வேளையில் அங்குப் போட்டியை நடத்துவது சரியல்ல என்று நான்கு முறை F1 உலக வெற்றியாளர் மாக்ஸ் வெர்ஸ்டாப்பென் (Max Verstappen) சொன்னார்.

ஆதாரம் : AFP