போர் காணொளியைப் பகிர்ந்த 313 பேர் கத்தாரில் கைது
This audio is generated by an AI tool.
ஈரான் நடத்திய தாக்குதல்களின் காணொளிகளைப் பகிர்ந்த 313 பேரைக் கத்தார் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அந்தக் காணொளிகள் மக்களைத் தவறாக வழிநடத்தக்கூடும் என்று கத்தாரின் உள்துறை அமைச்சு தெரிவித்தது.
கைதானவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள்.
தானியக்கக் கருவிகளைப் பயன்படுத்தி படம்பிடித்த மேல் ஐவர் கைது செய்யப்பட்டதாகவும் அமைச்சு கூறியது.
மத்திய கிழக்கின் மற்ற நாடுகளிலும் ஈரான் தாக்குதல்களின் காணொளிகளைப் பகிர்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பஹ்ரேனில் ஈரான் தாக்குதலின் தாக்கத்தைக் காணொளி எடுத்துப் பகிர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் அத்தகைய செயலுக்கு எதிராக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிலையங்கள், ராணுவத் தளங்கள், எரிசக்தி ஆலைகள், குடியிருப்புப் பகுதிகள் ஆகியவற்றைக் குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது.