கத்தாரில் இந்தியாவின் முன்னாள் அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து
(கோப்புப் படம்: CNA)
கத்தாரில் இந்தியக் கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைதான அவர்களின் தண்டனை குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
அவர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய தண்டனை என்னவென்று தெரிவிக்கப்படவில்லை.
முன்னாள் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்றும் தெரியவில்லை.
கத்தார் அரசாங்கத்துக்கு நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டத் தனியார் நிறுவனத்துடன் பணிபுரிந்த அவர்கள் வேவு வேலை பார்த்திருக்கலாம் என்று ஊடகங்கள் கூறியுள்ளன.
அக்டோபர் மாதத்தில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதை அறிந்து ஆச்சரியமடைந்ததாகக் கூறிய இந்தியா நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தது.