Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"கத்தாரில் கட்டுமானப் பணிகளில் 400க்கும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் மாண்டனர்"

வாசிப்புநேரம் -

கத்தாரில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தொடர்பான கட்டுமானப் பணிகளில் 8 ஆண்டுகளில் 400இலிருந்து 500 வெளிநாட்டு ஊழியர்கள் வரை மாண்டதாக ஏற்பாட்டுக் குழுவின் மூத்த அதிகாரி ஹசான் அல்-தவாடி (Hassan Al-Thawadi) கூறியுள்ளார். 

பிரிட்டிஷ் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் அவர் அதனைத் தெரிவித்தார்.

அந்த அதிகாரி குறிப்பிட்ட எண்ணிக்கை தேசியப் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது. 

புள்ளிவிவரங்கள், கத்தாரில் 2014ஆம் ஆண்டிலிருந்து 2020 வரை அனைத்துத் துறைகளையும் எல்லா நாட்டவரையும் உள்ளடக்கியவை என்று கூறப்பட்டது.  

அவற்றின்படி 8 ஆண்டுகளில் 414 ஊழியர்கள் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.  

இருப்பினும் கத்தாரின் அதிகாரிகள் வெளியிட்ட புள்ளி விவரங்களுடன் அது முரண்படுகிறது.

அதிகாரிகள் உலகக் கிண்ணப் போட்டி தொடர்பான கட்டுமானத் திட்டங்களில் 37 ஊழியர்கள் மாண்டதாகக் கூறிவருகின்றனர்.

ஊழியர்களில் மூவர் மட்டுமே வேலையிட விபத்துகளில் மாண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

கத்தாரின் மொத்த மக்கள்தொகை 2.9 மில்லியன். 

அதில் 2.5 மில்லியன் பேர் வெளிநாட்டு ஊழியர்கள்.


- AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்