கத்தார் எரிவாயு மையத்தை ஈரான் தாக்கினால் சிங்கப்பூரில் ஏன் மின்சார விலை உயரும்?
கோப்புப் படம்: Reuters/Stringer
This audio is generated by an AI tool.
ராஸ் லஃபான் (Ras Laffan).
இதுதான் உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு நிலையம் (LNG).
உலகளாவிய மின்சார விநியோகத்தில் சுமார் 20 விழுக்காடு இந்த நிலையத்திலிருந்துதான் ஏற்றுமதியாகிறது.
இந்த நிலையத்தில் இடையூறு ஏற்பட்டால் அது உலகளவில் எரிசக்தி விநியோகத்தைக் கடுமையாகப் பாதிக்கும்.
எத்தகைய பாதிப்பு?
த்தாரின் ஏற்றுமதி ஆற்றல் 17 விழுக்காடு குறையும். இந்த நிலை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
அண்மை நிலவரப்படி இந்த நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல் காரணமாக ஐரோப்பிய எரிவாயு விலை 35 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.
இதன் தாக்கம் ஐரோப்பாவில் மட்டும் அல்ல; சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுளையும் விரைவில் பாதிக்கலாம்.
சிங்கப்பூரை ஏன் பாதிக்கிறது?
சிங்கப்பூருக்கு இந்த நிலையம் மிகவும் முக்கியம்.
ஏனெனில் சிங்கப்பூரில் கிடைக்கும் மின்சாரத்தில் 95 விழுக்காடு வேறு நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் இயற்கை எரிவாயுவை நம்பியிருக்கிறது.
இயற்கை எரிவாயுவை சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யும் இரண்டாவது மிகப்பெரிய நாடு கத்தார். கத்தாரிலிருந்து மட்டும் 25 விழுக்காடு இயற்கை எரிவாயு சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. 2024ஆம் ஆண்டில் கத்தார் சிங்கப்பூருக்கு 1,685 மில்லியன் கிலோகிராம் எரிவாயுவை இறக்குமதி செய்தது.
இந்நிலையில், ஈரான் தாக்குதல் காரணமாக கத்தார் சில நீண்டகால இயற்கை எரிவாயு ஒப்பந்தங்களுக்கு "force majeure" அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
குறிப்பு: "force majeure" என்பது ஒரு விநியோகிப்பாளரின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள், போர் அல்லது திடீர்த் தடைகளால் நடப்பிலுள்ள ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் போகும் சூழ்நிலையைக் குறிக்கும் சட்டபூர்வ சொல்.
இதனால் சிங்கப்பூர் இப்போது தீவிரமாக மாற்று வழியைத் தேட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது.
தாக்கம்?
சிங்கப்பூர் ஏற்கனவே எரிபொருள் செலவுகளின் தாக்கத்தைக் கண்டு வருகிறது.
ஆனால் தற்காலிக விலை வரம்பு (TPC) செயல்பாட்டில் இருப்பதால் சிங்கப்பூரர்கள் விலை ஏற்றம் குறித்த தாக்கத்தைச் சற்றுத் தாமதமாக உணரலாம்.
மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நீடித்தால், மின்சார விலைகள் இந்த ஆண்டு முழுவதும் உயர்வாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.