Skip to main content
கத்தாரில் இஸ்ரேல் தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கத்தாரில் இஸ்ரேல் தாக்குதல் - டிரம்ப் ஏமாற்றம்

வாசிப்புநேரம் -
கத்தாரில் இஸ்ரேல் தாக்குதல் - டிரம்ப் ஏமாற்றம்

படம்: REUTERS/Ibraheem Abu Mustafa

கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump)மெல்லிய ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கத்தார் தலைநகர் டோஹாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க முயன்றதாக அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) அங்கு தாக்குதல் நடத்த முடிவு எடுத்ததாகவும் தம்மிடம் சொல்லவில்லை என்றும் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.

திரு நெட்டன்யாஹுவைத் திரு டிரம்ப் கண்டிப்பது அபூர்வம்.

தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகைக்குத் தகவல் அளிக்கப்பட்ட உடனே கத்தாருக்குச் செய்தி அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால் தாக்குதலைத் தடுத்து நிறுத்த போதுமான நேரம் இல்லை என்று அவர் சொன்னார்.

கத்தார், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு என்றார் திரு டிரம்ப்.

தாக்குதல் நடந்த இடம் குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.

இருப்பினும் ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவது நல்ல குறிக்கோள் என்று அவர் தமது Truth Social தளத்தில் குறிப்பிட்டார்.

இதுபோன்ற தாக்குதல் கத்தார் மண்ணில் மீண்டும் நடைபெறாது என்று திரு டிரம்ப் கத்தார் ஆட்சியாளர் ஷேக் தமிம் பின் ஹமாட் அல் தானிக்கு (Sheikh Tamim Bin Hamad Al Thani) உறுதியளித்துள்ளார்.

கத்தாரில் அமெரிக்காவின் மிகப் பெரிய ராணுவத் தளம் உள்ளது.

தாக்குதல் தொடங்கிய 10 நிமிடத்துக்குப் பிறகே தகவல் தரப்பட்டதாக கத்தார் சொல்கிறது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்