"சொகுசு விமானம் அதிபர் டிரம்ப்புக்கு அன்பளிப்பல்ல" - கத்தார்
வாசிப்புநேரம் -
(படம்: Brendan SMIALOWSKI / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்காவிற்கு வழங்கப்படும் சொகுசு விமானம் அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கான தனிப்பட்ட அன்பளிப்பு அல்ல என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜசிம் அல்-தானி தெரிவித்துள்ளார்.
அது இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான பரிமாற்றம் என்று அவர் கூறினார்.
கத்தார் அன்பளிப்பு கொடுத்து திரு டிரம்ப்பைத் தனது வசம் இழுக்கிறது என்கிற குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.
அமெரிக்க நட்பு நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்க்க கத்தார் உதவுவதாக அவர் CNN செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் கூறினார்.
கத்தார் என்றுமே அமெரிக்காவிற்கு ஆதரவு அளித்திருக்கிறது என்றார் திரு ஷேக் முகமது.
சொகுசு விமான அன்பளிப்பு இன்னும் சட்டரீதியாக ஆராயப்படுகிறது என்று அவர் பகிர்ந்தார்.
இதுபோன்ற அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அது முட்டாள்தனம் எனத் திரு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.
எனினும் வெளிநாட்டு அரசாங்கத்திடமிருந்து விலையுயர்ந்த பொருளை அன்பளிப்பாகப் பெறுவது குறித்துப் பாதுகாப்பு அக்கறைகள் எழுந்துள்ளன.

ஆதாரம் : AFP