Skip to main content
ஈரானுக்குப் பதிலடி கொடுக்கும் உரிமை தனக்கு உள்ளது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஈரானுக்குப் பதிலடி கொடுக்கும் உரிமை தனக்கு உள்ளது - கத்தார்

வாசிப்புநேரம் -
ஈரானுக்குப் பதிலடி கொடுக்கும் உரிமை தனக்கு உள்ளது - கத்தார்

(கோப்புப் படம்: REUTERS/Imad Creidi)

அல் உதேய்த் (Al Udeid) தளத்தின்மீது ஈரான் நடத்திய தாக்குதல் தனது அரசுரிமை, ஆகாய வெளி, அனைத்துலகச் சட்டம், ஐக்கிய நாட்டுச் சாசனம் ஆகியவற்றின் மீதான அத்துமீறல் என்று கத்தார் வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் மஜேட் அல்-அன்சாரி (Majed al-Ansari) கூறியுள்ளார்.

ஈரானிய ஏவுகணைகளைக் கத்தார் வெற்றிகரமாய் இடைமறித்ததாகச் சொன்ன அவர், தளத்திலிருந்தவர்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதாகச் சொன்னார்.

ஈரானின் தாக்குதலை மதிப்பிட்டு உரிய பதிலடி கொடுக்கும் உரிமை கத்தாருக்கு இருப்பதாகத் திரு மஜேட் கூறினார்.

அல் உதேய்த் ஆகாயப் படைத்தளம் மீது குறுந்தொலைவு, இடைத்தொலைவு தாழப் பறக்கும் ஏவுகணைகளை ஈரான் பாய்ச்சியதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு கூறியுள்ளது.

நிலைமையை ஆராய்ந்து வருவதாகத் தற்காப்பு அமைச்சின் அதிகாரி கூறினார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்