ஈரான் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்
Reuters/Stringer
அமெரிக்கா, ஈரானின் கேஷ்ம் (Qeshm) தீவைத் தாக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
நட்புநாடுகள்மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகத் தீவைத் தாக்கியதாக அமெரிக்கா சொன்னது.
ஈரான், குவைத்தையும் பஹ்ரைனையும் மற்ற நாடுகளையும் நோக்கி ஏவுகணைகளைப் பாய்ச்சியதாகவும் அவற்றை இடைமறித்ததாகவும் அமெரிக்கா கூறியது.
இந்நிலையில் , அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படைத் தலைமையகம், ஆகாயத் தளம், போர்க்கப்பல் ஆகியவற்றைக் குறிவைத்ததாக ஈரான் சொன்னது.
அமெரிக்க மத்தியத் தளபத்தியம் அதனை மறுத்தது.
ஈரானை நோக்கிச் சென்றுகொண்டிருந்த எண்ணெய்க் கப்பல் ஒன்றைத் தாக்கியதாகவும் அமெரிக்கா கூறியது.
24 மணி நேரத்தில் பல முறை விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளைக் கப்பல் சிப்பந்திகள் புறக்கணித்ததாக மத்தியத் தளபத்தியம் தெரிவித்தது.