கல்லறைகளில் QR குறியீட்டுடன் ஒட்டுவில்லைகள் - விசாரிக்கும் காவல்துறை
வாசிப்புநேரம் -
(படம்: envato.com)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஜெர்மனியின் மியூனிக் (Munich) நகரில் உள்ள 3 இடுகாடுகளில் இருக்கும் கல்லறைகளில் 1000க்கும் மேற்பட்ட QR குறியீட்டுடன் கூடிய ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டுள்ளதாக AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவற்றில் அடக்கம் செய்யப்பட்டவரின் பெயரும் இடுகாட்டில் அந்தக் கல்லறை இருக்கும் இடமும் குறிப்பிடப்பட்டுள்ளன.
வேறு எந்த விவரமும் இடம்பெறவில்லை.
பல்லாண்டுப் பழைமையான கல்லறைகளிலும் புதிய கல்லறைகளிலும் QR குறியீட்டுடன் கூடிய ஒட்டுவில்லைகள் காணப்பட்டதாகக் காவல்துறை கூறியது
அவற்றை ஒட்டியது யார், எதற்காக ஒட்டினார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.
அண்மையில்தான் அவை காணப்பட்டன என்று AP செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
ஒட்டுவில்லைகளைப் பொருத்துபவரை யாராவது கண்டால் இடுகாடுகளின் நிர்வாகத்திடம் தெரிவிக்குமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆதாரம் : AP