Skip to main content
தவறுதலாக மன்னர் சார்ல்ஸின் மரணத்தை அறிவித்த வானொலி நிலையம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தவறுதலாக மன்னர் சார்ல்ஸின் மரணத்தை அறிவித்த வானொலி நிலையம்

வாசிப்புநேரம் -
தவறுதலாக மன்னர் சார்ல்ஸின் மரணத்தை அறிவித்த வானொலி நிலையம்

(படம்:Reuters)

பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸின் (Charles) மரணத்தைத் தவறுதலாக அறிவித்த வானொலி நிலையம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

கணினிக் கோளாற்றால் அந்தத் தவறு நேர்ந்ததாகப் பிரிட்டனைச் சேர்ந்த Radio Caroline தெரிவித்தது.

அரசக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மறைந்தால் என்ன செய்ய வேண்டும் என்கிற நடைமுறையைப் பிரிட்டனில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களும் தயார் நிலையில் வைத்திருக்கும் என்று Radio Caroline நிர்வாகி பீட்டர் மூர் (Peter Moore) கூறினார்.

கணினிக் கோளாற்றால் அது செயல்படுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

மன்னரிடமும் வானொலியைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடமும் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

இன்னும் பல ஆண்டுகளுக்கு மன்னரின் கிறிஸ்துமஸ் செய்தியை ஒலிபரப்ப விரும்புவதாகவும் அவர் சொன்னார்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்