ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்தில் தொடரும் மழை - மேட்டுப்பகுதி நோக்கிச் செல்லும் மக்கள்
வாசிப்புநேரம் -

(படம்: Handout / QUEENSLAND FIRE DEPARTMENT / AFP)
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து (Queensland) மாநிலத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குத் தொடர்ந்து கடும் மழை பெய்கிறது.
ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் இல்லை.
நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
சில வட்டாரங்களில் நெருக்கடிநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குவீன்ஸ்லந்தின் சில பகுதிகளில் கடந்த 3 நாளில் 2 மீட்டருக்கும் கூடுதலான மழை பதிவாகியுள்ளது.
மீட்புப் படகொன்று கவிழ்ந்ததில் அதிலிருந்த மூதாட்டி தண்ணீருக்குள் மூழ்கினார்.
நூற்றுக்கணக்கானோர் தற்காலிக நிவாரண நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மேலும் பலர் ஆபத்து அதிகமுள்ள வட்டாரங்களைத் தவிர்த்து மேட்டுப் பகுதிகளுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : Others