Skip to main content
பிரேசிலில் வெள்ளத்தில் மாண்டோர் எண்ணிக்கை உயர்வு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரேசிலில் வெள்ளத்தில் மாண்டோர் எண்ணிக்கை உயர்வு

வாசிப்புநேரம் -
பிரேசிலில் வெள்ளத்தில் மாண்டோர் எண்ணிக்கை உயர்வு

(படம்: CARLOS FABAL / AFP)

பிரேசிலின் தெற்கே வெள்ளம், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள ரியோ கிராண்டே டோ சுல் (Rio Grande do Sul) மாநிலத்தை அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (Luiz Inacio Lula da Silva) பார்வையிட்டுள்ளார்.

அந்தப் பேரிடரில் மாண்டோர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. 60 பேரைக் காணவில்லை.

மாநிலத்தில் தற்போது நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக மாநிலத்தில் உள்ள சுமார் 150 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பலர் காயமடைந்தனர். 10,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

இது வரலாறு காணாத மிக மோசமான பேரிடர் என்று மாநில ஆளுநர் கூறியுள்ளார்.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்