Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆண்டுக்கு ஆண்டு மாறும் ரமதான் பண்டிகை

ரமதான் மாதம் 2030ஆம் ஆண்டில் இரண்டு முறை வரும்.

வாசிப்புநேரம் -
ஆண்டுக்கு ஆண்டு மாறும் ரமதான் பண்டிகை

Unsplash

சிங்கப்பூரில் சில ஆண்டுகளுக்கு முன் ஆண்டிறுதியில் தீபாவளியுடன் நோன்பு மாதமும் வந்தது.

அக்காலக்கட்டம் 'தீப ராயா' (Deepa Raya) என்று அழைக்கப்பட்டது.

இவ்வாண்டோ நோன்பு தொடங்குவது மார்ச் மாதத்திலேயே வந்துவிட்டது.

ரமதான் தொடங்கும் நாள் ஏன் ஆண்டுக்கு ஆண்டு வேறுபடுகிறது?

இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி சந்திரச் சுழற்சியின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை அல்லது பிறையுடன் தொடங்கும்.

அடுத்த அமாவாசை ஏற்படும்போது மாதம் நிறைவடையும்.

சூரியன் அடிப்படையில் அமைந்துள்ள ஆங்கில நாட்காட்டியுடன் ஒப்பிடுகையில் இஸ்லாமிய நாட்காட்டியில் 11 நாள்கள் குறைந்திருக்கும்.

ஒவ்வோர் ஆண்டும் ரமதான் மாதம் அதற்கு முந்திய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 முதல் 12 நாள்கள் முன்கூட்டியே இடம்பெறும்.

ஓர் ஆண்டில் ரமதான் 2 முறை இடம்பெறுவது சாத்தியமா?

சாத்தியமே! 2030ஆம் ஆண்டில் ரமதான் மாதம் இரண்டு முறை வரும்.

ஜனவரி 5ஆம் தேதி ஒரு முறையும் டிசம்பர் 25ஆம் தேதி ஒரு முறையும் ரமதான் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் 1997ஆம் ஆண்டில் ஜனவரியிலும் டிசம்பரிலும் ரமதான் இடம்பெற்றிருந்தது.

2063ஆம் ஆண்டிலும் அவ்வாறு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

வானில் பிறை தோன்றும்போது தொடங்கும் ரமதான்

வானில் பிறை தோன்றும்போது, அது ரமதான் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும்.

பிறையைத் தனிப்பட்ட நாடுகளில் நேரடியாகக் காண்பது அவசியம்.

பிறையைக் காணமுடியவில்லை என்றால் புதிய மாதம் மேலும் ஒரு நாள் தள்ளிப்போகும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்