Skip to main content
ரமதானுக்கு மும்முரமாகத் தயாராகும் மக்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ரமதானுக்கு மும்முரமாகத் தயாராகும் மக்கள்

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவிலும் பாகிஸ்தானிலும் ரமதான் மாதத்துக்கு மக்கள் மும்முரமாகத் தயாராகின்றனர்.

உலகின் ஆக அதிக முஸ்லிம் மக்கள்தொகையைக் கொண்ட இந்தோனேசியாவில் ஒரு மாத நோன்பைக் கடைப்பிடிக்க மக்கள் ஆயத்தமாகின்றனர்.

சந்தைகளில் கூட்டம் ஓய்ந்தபாடில்லை.

தேவையான பொருட்களை வாங்க மக்கள் திரள்கின்றனர்.

ரமதான் மாதம் வரும் வாரத்தில் தொடங்குகிறது.

விலைவாசி கூடியிருந்தாலும் நோன்புப் பெருநாளுக்கான ஆயத்தங்கள் களைகட்டிவருகின்றன.

சென்ற மாதம் இந்தோனேசியா மூன்று ஆண்டுகள் காணாத பணவீக்கத்தைப் பதிவு செய்திருந்தது.

இருந்தபோதிலும் கடந்த டிசம்பரில் ஏற்றுமதிகளும் இறக்குமதிகளும் வலுவாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானிலும் பண்டிகைக்கான ஏற்பாடுகள் மும்முரம்.

கராச்சி உள்ளிட்ட நகரங்களில் மக்கள் ரமதான் மாதத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கச் சந்தைகளுக்கு விரைந்தனர்.

கராச்சியின் மொத்த விற்பனைச் சந்தையில் கூட்ட நெரிசல்.

2023ஆம் ஆண்டில், ஆசியாவிலேயே ஆக அதிகளவில் பணவீக்கத்தை எதிர்நோக்கிய நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று.

விலைகள் வழக்கத்தைக் காட்டிலும் 40 விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்தன.

தற்போது பணவீக்கம் கிட்டத்தட்ட 6 விழுக்காடு குறைந்துள்ளது.

இதற்கிடையே, பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் (Shehbaz Sharif) 38 பில்லியன் ரூபாய் (சுமார் 171.4 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான ரமதான் நிவாரணத் திட்டத்தை அறிவித்துள்ளார்.

வசதி குறைந்த மக்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்