Skip to main content
ஊதா நட்சத்திர இந்திரநீலக்கல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஊதா நட்சத்திர இந்திரநீலக்கல் - விலை $300 மில்லியன்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உலகின் மிகப்பெரிய ஊதா நட்சத்திர இந்திரநீலக்கல் இலங்கையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதன் பெயர் "Star of Pure Land".

எடை 3,563 காரட்.

விலை 300 மில்லியன் அமெரிக்க டாலர் (385 மில்லியன் வெள்ளி) என்று கூறப்படுகிறது.

அது ஆறு கதிர்கள் கொண்ட நட்சத்திர வடிவத்தைக் கொண்டது.

இந்தக் கல் உலகின் ஆகப்பெரிய ஆவணப்படுத்தப்பட்ட இயற்கை ஊதா நட்சத்திர இந்திரநீலக்கல் என்று இரத்தினக்கல் நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

விலையுயர்ந்த இந்தக் கல்லை விற்க அதன் உரிமையார்கள் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக உரிமையாளர்களின் தகவல் வெளியிடப்படவில்லை.

இந்த இரத்தினக்கல் 2023ஆம் ஆண்டு "இரத்தினக்கற்களின் நகரம்" என்று அறியப்படும் இலங்கையின் தொலைதூர ரத்னபுரா (Rathnapura) நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை வாங்கிய பிறகு ஈராண்டுகள் கழித்தே அது ஒரு சிறப்புக் கல் என்பதை உரிமையாளர்கள் கண்டறிந்தனர். அவை சோதிக்கப்பட்டு சான்றுகளும் பெறப்பட்டன.

இலங்கையில் கிடைக்கும் இந்திரநீலக்கற்கள் அவற்றின் தனித்துவமான நிறத்துக்கும் பளபளப்புக்கும் பிரபலமானவை.

ஆதாரம் : AP

மேலும் செய்திகள் கட்டுரைகள்