உலகம் trending
இந்தோனேசியாவில் "வானவில்" வண்ண மேகங்கள்
வாசிப்புநேரம் -
படம்: X/@BenjaminCornu
இந்தோனேசியாவின் ஜொங்கொல் (Jonggol) பகுதியில் வானவில் நிறங்கொண்ட மேகங்கள் மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன.
இம்மாதம் முதல் தேதி அவை காணப்பட்டதாகச் சமூக ஊடகப் பதிவுகள் குறிப்பிட்டன.
மேகங்களைச் சுற்றியுள்ள காற்றில் இருக்கும் மிகச் சிறிய நீர்த்துளிகளில் சூரிய ஒளிபடும்போது பலவித வண்ணங்கள் தோன்றுகின்றன.
மேகங்களின் வடிவத்தைப் பொறுத்து அந்த வண்ணங்களின் தோற்றமும் மாறுபடும். அதனால் அவற்றைப் பார்ப்பதற்கு வானவில்போன்று தோன்றக்கூடும்.
அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காட்டும் காணொளிகள் இணையவாசிகளால் பகிரப்பட்டுள்ளன.
காணொளிகளைக் கண்டவர்களில் சிலர் அது உண்மையா இல்லை பொய்யா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
வேறு சிலர் இதுபோன்ற அழகிய அரிதான காட்சியைக் காண முடிந்ததில் மகிழ்ச்சிகொண்டதாகக் கூறினர்.

ஆதாரம் : Others