Skip to main content
இறைச்சியைக் குறைக்கச் சொல்லும் வல்லுநர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இறைச்சியைக் குறைக்கச் சொல்லும் வல்லுநர்கள் - காரணம்?

வாசிப்புநேரம் -
இறைச்சியைக் குறைக்கச் சொல்லும் வல்லுநர்கள் - காரணம்?

Unsplash/Anil Sharma

வெளியீடு : 04 Oct 2025 08:45AM புதுப்பிப்பு : 04 Oct 2025 11:33AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உணவில் இறைச்சி குறைந்த அளவில்தான் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

ஆரோக்கியமான உணவு தாவர வகையைச் சார்ந்தே உள்ளது என்றும் மாமிசம், உப்பு, சர்க்கரை, கொழுப்பு ஆகியவை அளவோடு சேர்க்கப்படவேண்டும் என்றும் The Lancet சஞ்சிகையில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

ஆய்வாளர்கள் பரிந்துரைக்கும் அளவு...நாளொன்றுக்கு 

ஆடு, மாடு, பன்றி போன்ற சிவப்பு இறைச்சி (red meat) -  15 கிராம்

காய்கறிகள் - 200 கிராம்

பழங்கள் - 300 கிராம்

தானியங்கள் - 210 கிராம்

பால் சார்ந்த பொருள்கள் - 250 கிராம்

கடலுணவு - 30 கிராம்

இதனைப் பின்பற்றினால் உணவுப் பழக்கத்தால் ஏற்படக்கூடிய நாட்பட்ட நோய்களைத் தவிர்க்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

மாமிசம் குறைவாகச் சாப்பிடவேண்டும் என்று 2019இல் வெளியான ஆய்வொன்றிலும் வலியுறுத்தப்பட்டது.

அப்போது அறிவியல் சமூகங்கள் பரிந்துரையை வரவேற்ற போதும்  உலகெங்கிலும் உள்ள விவசாய, உணவு அமைப்புகள் அதனை நிராகரித்துவிட்டன.

ஆய்வு முடிவுகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவை உள்ளூர் மக்களின் உணவுமுறைக்கு எதிராக உள்ளன என்றும் அமைப்புகள் தெரிவித்தன.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்