"இந்தியாவின் Reliance நிறுவனம் வெனிசுவேலாவின் எண்ணெயை வாங்கும் உரிமத்துக்கு விண்ணப்பம்"
This audio is generated by an AI tool.
இந்தியாவின் Reliance நிறுவனம் வெனிசுவேலாவிலிருந்து எண்ணெயை வாங்க அமெரிக்க உரிமத்துக்கு விண்ணப்பிக்கவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தவேண்டும் என்று அமெரிக்கா நெருக்குதல் கொடுப்பதைத் தொடர்ந்து Reliance அந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவும் வெனிசுவேலாவும் எண்ணெய் ஏற்றுமதி குறித்த பேச்சுவார்த்தையை நடத்திவருகிறது.
இதற்கு முன்னர் Reliance வெனிசுவேலாவிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றிருக்கிறது.
சென்ற ஜனவரியிலிருந்து ஏப்ரல்வரை வெனிசுவேலாவின் PDVSA எண்ணெய் நிறுவனம் நாளுக்கு 63,000 பீப்பாய் எண்ணெயை Reliance நிறுவனத்துக்கு விநியோகம் செய்தது.
ஆனால் சென்ற மார்ச் மாதம் PDVSAவின் வர்த்தகப் பங்காளிகள் எண்ணெய் வாங்கும் உரிமங்களை அமெரிக்கா ரத்து செய்தது. தொடர்ந்து எண்ணெய் வாங்கினால் வரிகள் ஏற்றப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்திருந்தது.
கடைசியாகச் சென்ற மே மாதம் Reliance வெனிசுவேலாவிலிருந்து எண்ணெயைப் பெற்றது.