காணாமல்போன சிறுமியின் தாடையும் பல்லும் கிடைத்தது....14 ஆண்டுக்குப் பிறகு
வாசிப்புநேரம் -
ஜப்பானில் 2011ஆம் ஆண்டு நிலநடுக்கத்தில் காணாமல் போன 6 வயதுச் சிறுமியின் தாடை எலும்பும் பல்லும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது நட்சுசே யமனே (Natsuse Yamane) எனும் அந்தச் சிறுமி யமாடா (Yamada) நகரில் தமது பாட்டி வீட்டில் இருந்தார்.
நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி ஏற்பட்டது.
பாட்டி உயிர் தப்பினார். ஆனால் சிறுமி காணாமல் போனார்.
அப்போது காணாமல்போன 2,500 பேரில் சிறுமியும் ஒருவர்.
சிறுமியைப் பெற்றோர் பல இடங்களில் தேடினர்.
தற்காலிக மையங்கள், பிணவறைகள் உள்ளிட்ட இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
6 மாதங்கள் கடந்தன.
தேடுவதைப் பெற்றோர் நிறுத்தினர்.காவல்துறையிடம் புகார் தந்தனர்.
ஆண்டுகள் கடந்த நிலையில் அண்மையில் நட்சுசே காணாமல் போன இடத்திலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் வசிக்கும் 52 வயது ஆடவரிடமிருந்து பெற்றோருக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது.
சிறுமியின் உடல் பாகங்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டதாகப் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது.
அவற்றை 2023ஆம் ஆண்டு அந்தக் கடலோரப் பகுதியைத் தன்னார்வமாகச் சுத்தம் செய்துகொண்டிருந்த கட்டுமான ஊழியர் ஒருவர் கண்டெடுத்தார்.
DNA மரபணு சோதனை வழி அவை சிறுமியுடையது என்பது உறுதியானது.
14 ஆண்டுகளுக்குப் பிறகு அவை சிறுமியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.
மகளே தங்களிடம் திரும்பி வந்தது போன்ற உணர்வு கிடைத்துள்ளதாகப் பெற்றோரும் பாட்டியும் கண்ணீர் மல்கக் கூறினர்.

ஆதாரம் : South China Morning Post