Skip to main content
நிலவின் மீது மோதிய SpaceX உந்துகணை...நிலவில் குப்பை அதிகரிக்கிறதா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நிலவின் மீது மோதிய SpaceX உந்துகணை...நிலவில் குப்பை அதிகரிக்கிறதா?

வாசிப்புநேரம் -
நிலவின் மீது மோதிய SpaceX உந்துகணை...நிலவில் குப்பை அதிகரிக்கிறதா?

படம்: Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்காவின் SpaceX உந்துகணையின் ஒரு பகுதி எதிர்பார்த்ததுபோல் நிலவின் மீது மோதியிருக்கிறது.

அந்த Falcon 9 உந்துகணை கடந்த ஆண்டு பாய்ச்சப்பட்டது.

அதன் நான்கு டன் மேற்பகுதி திட்டமிட்டபடி நிலவில் மோதியது.

மோதலுக்குப்பின் நிலவில் மனிதன் போட்ட குப்பைகள் கிடப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த நான்கு டன் உந்துகணைப் பகுதி மணிக்கு 8,700 கிலோமீட்டர் வேகத்தில் நிலவின் மீது மோதும் என்று கணிக்கப்பட்டது.

30 மீட்டர் அகலத்தில் பள்ளம் ஏற்பட்டு, நூறு கிலோமீட்டர் உயரம் வரை தூசு பரவியிருக்கலாம்.

நிலவில் குப்பை சேர்வது பற்றிய கவலையை இது அதிகரித்துள்ளது.

அமெரிக்காவும் சீனாவும் போட்டிபோட்டுக்கொண்டு நிலவில் தளம் அமைக்க எண்ணுவதால் நிலைமை இன்னும் மோசமாகலாம்.

நாலாண்டுக்கு முன்பு சீனாவின் உந்துகணை இதேபோல் எதிர்பாரா விதமாய் நிலவை மோதியது. கடந்த காலங்களில் இப்படிப் பலமுறை பாதை தவறிய உந்துகணைகள் நிலவை மோதியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

 
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்