உலகம் trending
"Bosnia எங்கு இருக்கிறது என்றுகூடத் தெரியாது!" பெருமை பேசிய அமெரிக்கச் செய்தியாளருக்குக் கண்டனம்
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
போஸ்னியா - ஹெர்ஸகோவினா (Bosnia -Herzegovina) பற்றி ஒன்றும் தெரியாது, தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை என்று பெருமையாகக் கூறிய அமெரிக்கச் செய்தியாளருக்கு எதிராகக் கண்டனம் குவிகிறது.
அபிகேல் வெலெஸ் (Abigail Velez) ABC ஊடகத்தில் தொலைக்காட்சி செய்தியாளராகப் பணிபுரிகிறார்.
அமெரிக்காவுக்கும் போஸ்னியாவுக்கும் இடையே நடக்கவிருக்கும் உலகக் கிண்ணப் போட்டியைப் பற்றி பேசும்போது அவர் அந்தக் கருத்தைப் பகிர்ந்தார்.
அமெரிக்க அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக நினைத்துக்கொண்டு அவர் அவ்வாறு பேசினார்.
"வரைபடத்தில் போஸ்னியா எங்கு இருக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது. போஸ்னியாவைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. ஏனெனில் போஸ்னியாவை அமெரிக்க அணி வீழ்த்திவிடும்," என்று திருவாட்டி வெலெஸ் நேரடி ஒளிபரப்பின்போது சொன்னார்.
அந்தக் காணொளி இணையத்தில் பரவியது.
பலர் அதற்குக் கண்டனம் தெரிவித்தனர்.
அறியாமையில் பெருமை ஏதும் இல்லை என்று பலர் X தளத்தில் பதிவிட்டனர்.
செய்தியாளராக இருக்கும்போது மற்ற நாடுகளைப் பற்றி இவ்வளவு இழிவாகப் பேசக்கூடாது என்றும் பலர் கண்டித்தனர்.
திருவாட்டி வெலெஸ், போஸ்னியா காற்பந்து அணியிடமும் மக்களிடமும் மன்னிப்புக் கேட்டார்.
விளையாட்டுத்தனமாகப் பேசி போஸ்னியா மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதை அவர் ஒப்புக்கொண்டார்.

ஆதாரம் : Mediacorp Seithi