பிலிப்பீன்ஸ் நிலநடுக்கம்: கட்டடங்கள் இடிந்தன; மீட்புப் பணிகள் தீவிரம்
படம்: AFP/Queenie Rose Adaya
பிலிப்பீன்ஸில் இன்று காலை ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தை அடுத்து ஜெனரல் சாண்டோஸ் (General Santos) நகரில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, ஒருவர் உயிரிழந்ததாகவும், நால்வர் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.
இது ஆரம்பக்கட்டத் தகவல் மட்டுமே என்றனர் அதிகாரிகள்.
பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன.
'ஜோலிபி' (Jollibee) துரித உணவு உணவகத்தைக் கொண்ட வணிக வளாகம் ஒன்று இடிந்து தரைமட்டமாவதும், உள்ளூர்ப் பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு கட்டடம் இடிந்துவிழுவதும் காணொளிகளில் பதிவாகியுள்ளன.
அவை Facebookஇல் பகிரப்பட்டுவருகின்றன.
சிலர் அலறும் சத்தத்தையும் கேட்க முடிவதாகத் தகவல் கூறுகிறது.
ஜெனரல் சாண்டோஸ் நகரம் பிலிப்பீன்ஸின் தென்கோடியில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும்.
அங்கு 722,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.