Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

காணாமல் போன அரசியல்வாதி... எப்படி முன்னோடித் தேர்தலில் வெற்றிபெற்றார்?

வாசிப்புநேரம் -
காணாமல் போன அரசியல்வாதி... எப்படி முன்னோடித் தேர்தலில் வெற்றிபெற்றார்?

படம்: Facebook/Tom Kean Jr

அமெரிக்க மாநிலங்களில் இடைத்தவணைத் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன.

அதற்கு முன்னதாக ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க முன்னோடித் தேர்தல்களை நடத்தும்.

நியூ ஜெர்சி வட்டாரத்தில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டாம் கீன் ஜூனியர் (Tom Kean Jr) நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

தம் கட்சியின் முன்னோடித் தேர்தலில் எதிர்ப்பின்றி அவர் வெற்றிபெற்றார்.

ஆனால் அவரைப் பல மாதங்களாகக் காணவில்லை.

எங்குச் சென்றார்?

பொது இடத்தில் கடைசியாக அவர் மார்ச் 5ஆம் தேதி காணப்பட்டார்.

யாருடைய குறுந்தகவலுக்கும் அழைப்புகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் நடந்த 100க்கும் மேலான வாக்கெடுப்புகளில் அவர் கலந்துகொள்ளவில்லை.

எங்குச் சென்றார் என்பது அவருடைய ஊழியர்களுக்கே தெரியவில்லை.

பிறகு ஏப்ரலில் திரு கீனுக்கு அரிய நோய் இருப்பதாக அவருடைய ஊழியர்கள் அறிவித்தனர். ஆனால் என்ன நோய் எனும் தகவலை வெளியிடவில்லை.

ஒரு மாதம் கழித்து அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக New Jersey Globe நாளேட்டிடம் கூறினார். விரைவில் பணிக்குத் திரும்ப அவர் உறுதியளித்தார்.
ஆதாரம் : Others/BBC

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்