சர்ச்சைக்குரிய தேர்தல் விளம்பரம்... தோல்வியடைந்த விவேக் ராமசாமி
REUTERS/Megan Jelinger
This audio is generated by an AI tool.
அமெரிக்காவின் ஒஹாயோ (Ohio) மாநில ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஏமி ஆக்டன் (Amy Acton) வெற்றி பெற்றுள்ளார்.
குடியரசுக் கட்சியின் கோடீஸ்வர வேட்பாளர் விவேக் ராமசாமியை (Vivek Ramaswamy) அவர் தோற்கடித்தார்.
60 வயது திருவாட்டி ஆக்டன் ஒரு மருத்துவர்.
COVID-19 பெருந்தொற்றின் தொடக்கத்தில் ஒஹாயோ சுகாதாரத் துறைக்குத் தலைமை தாங்கியவர்.
குடியரசுக் கட்சிக்கு அண்மைய ஆண்டுகளில் அதிக ஆதரவளித்தது ஒஹாயோ மாநிலம். 2024 அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப் அங்கு பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.
இப்போது அங்கு படுதோல்வி.
திரு ராமசாமியின் தேர்தல் விளம்பரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதில் திருவாட்டி ஆக்டனுடன் தொடர்பில்லாமல் வாழும் அவரது தாயார் டோனா ஆர்தர் (Donna Arthur) இடம்பெற்றிருந்தார்.
தமது மகள் வாழ்நாள் முழுவதும் பொய் கூறியதாகவும் அவர் ஆளுநராகக் கூடாது என்றும் தாயார் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த திருவாட்டி ஆக்டன், சிறுவயதில் தாமும் தமது சகோதரரும் பல இன்னல்களைச் சந்தித்ததாகக் கூறினார்.
தாயாரின் கணவர் தம்மைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தாயார் தம்மைப் பாதுகாக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
1978ஆம் ஆண்டிலிருந்து தாயாரைப் பார்க்கவில்லை என்ற திருவாட்டி ஆக்டன், அரசியல் ஆதாயத்திற்காக அவரைத் திரு ராமசாமி பயன்படுத்தியதாகச் சாடினார்.
ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியின் சிலரும் விளம்பரத்தைக் கண்டித்தனர்.
ஆனால் அதிபர் டிரம்ப்பும் துணையதிபர் J.D. வான்ஸும் (JD Vance) திரு ராமசாமிக்குத் தொடர்ந்து ஆதரவளித்தனர்.