அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பை உயர்த்தும் பேச்சில் சிறிது முன்னேற்றம்
வாசிப்புநேரம் -

(படம்:SAUL LOEB / AFP)
அமெரிக்காவில் கடன் உச்ச வரம்பு குறித்த பேச்சுவார்த்தையில் சிறு முன்னேற்றம் தென்படுகிறது.
தற்போது அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பு 31.4 டிரில்லியன் டாலர். அதில் திருத்தம் செய்யாமல் விட்டால் அமெரிக்க அரசாங்கம் நிதி நெருக்கடிக்குள்ளாகும்.
கடன் உச்ச வரம்பைத் திருத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாய் அமைந்தது என்று சமரசப் பேச்சாளர்கள் கூறினர்.
அதிபர் ஜோ பைடன் (Joe Biden), மக்களவை நாயகர் குடியரசுக் கட்சியின் கெவின் மெக்கார்த்தி (Kevin McCarthy) ஆகியோர் சார்பில் அவர்கள் பேச்சு நடத்தினர்.
நான்கு மணி நேர ஆலோசனைக்குப் பிறகு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் தெரிகிறது. மாலையில் பேச்சுவார்த்தை தொடரக்கூடும் என்று திரு. மெக்கார்த்தி கூறினார்.
சில அம்சங்களில் முரண்பாடுகள் நீடித்தாலும் இரு தரப்பும் உடன்பாடு எட்ட வாய்ப்பிருப்பதாக அவர் சொன்னார்.
பேச்சுவார்த்தை பயனுள்ளதாய் அமைந்தது என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கரீன் ஜோன்-பியர் (Karine Jean-Pierre) கூறினார்.
கடன் உச்சவரம்பு உயர்த்தப்படாவிட்டால் அடுத்த மாதத் தொடக்கத்தில் அமெரிக்க அரசாங்கம் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போகும் என்று நிதியமைச்சர் ஜனெட் யெல்லன் (Janet Yellen) எச்சரித்திருந்தார்.