Skip to main content
ஜகர்த்தாவின் ஆகப் பழைமையான கடைத்தொகுதியில் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஜகர்த்தாவின் ஆகப் பழைமையான கடைத்தொகுதியில் தீ - 6 பேர் மரணம்; 14 பேரைக் காணவில்லை

வாசிப்புநேரம் -
இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில் (Jakarta) இருக்கும் கடைத்தொகுதியில் நேர்ந்த தீச்சம்பத்தில் 6 பேர் மாண்டனர். காணாமல்போன 14 பேரைக் கண்டுபிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்நகரின் மிகப் பழைமையான கடைத்தொகுதிகளில் ஒன்று Glodok Plaza.

நேற்று முன்தினம் (15 ஜனவரி) இரவு சுமார் 9.22 மணியளவில் நடந்தது.

அடையாளம் காண்பதற்காக 6 சடலங்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டன.

முந்திய இரவு தொடங்கிய தீ நேற்று காலைதான் (16 ஜனவரி) அணைக்கப்பட்டது.

சூட்டைத் தணிக்கும் பணி இன்னும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் 9 பேர் மீட்கப்பட்டனர். அவர்களின் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

தீயை அணைக்கும் பணியில் சுமார் 50 தீயணைப்பு வண்டிகளும் 200 அதிகாரிகளும் ஈடுபட்டதாக Jakarta Post தெரிவித்தது.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்