Skip to main content
பிரேசில் வெள்ளம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரேசில் வெள்ளம் - தொடரும் மீட்புப் பணிகள்

வாசிப்புநேரம் -
பிரேசில் வெள்ளம் - தொடரும் மீட்புப் பணிகள்

(படம்: Brazilian Presidency/AFP/Isac Nobrega)

பிரேசிலின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான வெள்ளத்தில் காணாமற்போனவர்களைத் தேடி மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த வாரம் Rio Grande do Sul மாநிலத்தில் பெய்த கனமழையால் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

வெள்ளத்தில் 136 பேர் மாண்டனர். 756 பேர் காயமடைந்தனர். சுமார் 2 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

125 பேரை இன்னும் காணவில்லை. 410,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். 92,000க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

வெள்ளிக்கிழமை (10 மே) மீண்டும் மழை பெய்தது. இதனால் ஏற்கெனவே வெள்ளம் பெருக்கெடுத்த பகுதிகள் இன்னும் மோசமடைந்தன.

சாலைகளிலும் கட்டடங்களிலும் தேங்கியுள்ள சகதியை வெளியேற்ற இயந்திரக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. 
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்