தென்னிந்தியாவில் அரிசி விலை உயர்வு
வாசிப்புநேரம் -
படம்: CNA
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தென்னிந்தியாவில் அரிசி விலை அதிகரித்திருக்கிறது.
பருவமழை குறைவாக இருப்பதால் அறுவடை குறையலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மழை பெய்வது வழக்கத்தைவிட 40 விழுக்காடு குறைந்துள்ளது.
கேரளாவில் அடைமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டபோதும் மழை வழக்கத்தைவிடக் குறைவாகவே உள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் அரிசியின் சராசரி விலை 14 விழுக்காடு வரை கூடியதாக அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.
தென்னிந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அரிசியின் சராசரி விலை ஆக அதிகமாக உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சராசரி சில்லறை விற்பனை விலை மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் 14 விழுக்காடு கூடியது.
அந்த விலையேற்றம் தேசிய அளவைப்போல் நான்கு மடங்கானது.
விலையேற்றம் குறித்துக் கவனிப்பாளர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.
இப்போதைக்கு அரிசித் தட்டுப்பாடு இல்லை. தட்டுப்பாடு வந்துவிடுமோ என்ற ஊகத்தால் அரிசி விலை ஏறுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : CNA