Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நூறாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செய்ன் ஆற்றில் குளிக்க அனுமதி

வாசிப்புநேரம் -
பாரிஸின் செய்ன் (Seine) ஆற்றில் மக்கள் நீந்த அனுமதிக்கப்பட்டுள்ளது. 1923ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக அந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆற்றின் 3 பகுதிகளில் மக்கள் குளிக்கலாம். நேற்றிலிருந்து (5 ஜூலை) மக்கள் அங்கு குளிக்க ஆரம்பித்தனர். உயிர்காப்பாளர்களின் மேற்பார்வையில் பலர் ஆற்றில் நீந்தினர்.

குளிக்க அனுமதிக்கப்படும் பகுதிகளில் உடை மாற்ற அறைகள், குளியல் இடங்கள், இருக்கைகள் எனப் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு 150 முதல் 300 பேர் வரை இளைப்பாறலாம்.

சென்ற ஆண்டு (2024) பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது நீச்சல் வீரர்கள் செய்ன் ஆற்றில் போட்டியிட்டது முக்கிய அம்சமாக இருந்தது. அதற்காக ஆறு சுத்தப்படுத்தப்பட்டது.

ஆற்றில் நீந்துவது பாதுகாப்பானது என்பதை உறுதிசெய்ய தினமும் தண்ணீரின் தூய்மை சோதிக்கப்படும். அங்கு குளிக்க விரும்புவோருக்கு நீச்சல் சோதனையும் மேற்கொள்ளப்படும்.

ஆயினும் ஆற்றின் வலுவான நீரோட்டம், படகுகள் வந்து செல்வது, சராசரியாக 3.5 மீட்டர் ஆழம் ஆகியவை மக்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று அதிகாரிகள் நினைவூட்டினர்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்