சவுதி அரேபியா விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் - 12 பேர் பலி
வாசிப்புநேரம் -
படம்: Social Media/via REUTERS
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சவுதி அரேபியாவின் மன்னர் காலித் (King Khalid) அனைத்துலக விமான நிலையத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் மாண்டனர்.
300க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தாக்குதலுக்கு ஏமனைச் சேர்ந்த ஹெளதி கிளர்ச்சிப் படை பொறுப்பேற்றுள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹெளதி கிளர்ச்சியாளர்கள் அண்மையில் சவுதி அரேபியா மீது முன்னெப்போதும் இல்லாத அளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
தாக்குதலைத் தொடர்ந்து ரியாத்தில் இருந்து அனைத்து விமானங்களும் திருப்பிவிடப்பட்டன.
விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகச் சவுதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
கடுமையான அவசரநிலை ஏற்பட்டிருப்பதால் மருத்துவர்கள் பெருமளவில் பணிக்கு அழைக்கப்பட்டனர் என்று மருத்துவத் தகவல் ஒன்று கூறியது.
வெளிநாட்டுத் தூதரகங்களும் தங்கள் குடிமக்களை விமான நிலையப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்தன.
இந்த வாரம் மன்னர் காலித் அனைத்துலக விமான நிலையத்தில் ஏற்கனவே இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அவற்றில் நால்வர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஹெளதி கிளர்ச்சிப் படைக்கு எதிரான தாக்குதலில் சவுதிக்கு ஆதரவு தரக்கூடும் என்று கூறியுள்ளார்.

ஆதாரம் : Reuters