Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

போதிய சுகாதாரத் துறை ஊழியர்கள் இல்லையா? இருக்கவே இருக்கின்றன இயந்திரங்கள்

வாசிப்புநேரம் -
வெண்ணிற உடல்...

சக்கரங்களின் மீது இருந்தபடி நகரும் ஆற்றல்...

நீல வட்டக் "கண்கள்"; கறுப்புத் திரை...

ஜெர்மனியின் சுகாதாரத் துறையில் போதிய ஊழியர்கள் இல்லாத நிலையில் புதிய "ஊழியர்கள்" சேர்க்கப்பட்டுள்ளனர் - அவர்கள்...சுகாதார இயந்திரங்கள்.

Garmi என்றழைக்கப்படும் அந்தச் சுகாதார இயந்திரத்தால் நோயாளிகளின் பிரச்சினையைக் கண்டறிய முடியும். மேலும் அதனால் அவர்களைப் பராமரிக்கவும் அவர்களுக்குச் சிகிச்சை வழங்கவும் முடியும்.

மியூனிக்கில் இருக்கும் இயந்திரவியல், இயந்திர நுண்ணறிவு நிலையத்தைச் (Munich Institute of Robotics) சேர்ந்த சுமார் 12 அறிவியலாளர்கள் Garmi இயந்திரத்தைச் உருவாக்கியுள்ளனர்.

மூப்படையும் சமூகத்தைக் கொண்டிருக்கும் ஜெர்மனியில் அதிகச் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் தேவைப்படும் என்பதாலும் அவற்றுக்கு அதிக ஊழியர்கள் தேவைப்படுவர் என்பதாலும் இயந்திரங்கள் உருவாக்கப்பட்டதாக நிலையம் குறிப்பிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்