Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிலிப்பீன்ஸ் முன்னாள் அதிபர் டுட்டார்ட்டே மீது தொடங்கும் நீதிமன்ற விசாரணை

வாசிப்புநேரம் -
பிலிப்பீன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டார்ட்டே (Rodrigo Duterte) இன்று அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்குச் செல்கிறார். தற்காலிக விடுதலை பெற்றுக்கொடுக்க அவருடைய வழக்கறிஞர் குழு தீவிரமாக முயல்கிறது.

பிலிப்பீன்ஸ் அதிபராய் இருந்தபோது போதைப்பொருளுக்கு எதிரான போரை நடத்தினார் திரு டுட்டார்ட்டே. அந்த நடவடிக்கை மனிதகுலத்துக்கு எதிரானது என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அனைத்துலக நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடக்கிறது.

நெதர்லந்தின் ஹெக் நகரில் உள்ள தடுப்புக் காவல் நிலையத்தில் திரு டுட்டார்ட்டே வைக்கப்பட்டிருந்ததை அனைத்துலக நீதிமன்றம் உறுதிசெய்தது.

நீதிமன்ற வழக்கப்படி அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

தற்போது திரு டுட்டார்ட்டே எங்கிருக்கிறார் என்று தெரியவில்லையென அவருடைய வழக்கறிஞர் சொல்கிறார்.

உடல்நலம் குன்றியிருப்பதால் திரு டுட்டார்ட்டேயை மருத்துவமனைக்கு அனுப்பவேண்டும் என்று அவருடைய வழக்கறிஞர் குழு நீதிமன்றத்திடம் கேட்டிருந்தது.

அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால், அவர் எந்த மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்பதை அது சொல்லவில்லை.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்