Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மியன்மார் அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்கான முன்னோடித் திட்டம் அறிமுகம்

வாசிப்புநேரம் -
ரொஹிஞ்சா அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்கான முன்னோடித் திட்டம் ஒன்று அறிமுகம் காண்கிறது.

சுமார் ஆயிரம் அகதிகள் மீண்டும் மியன்மாருக்குள் அனுமதிக்கப்படுவர்.

திட்டம் அடுத்த மாத நடுப்பகுதியில் தொடங்கும் என்று மியன்மாரின் ராணுவ அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

அகதிகள் நாடு திரும்புவதற்கான நேர்காணலை நடத்த 17 ராணுவ அதிகாரிகள் கடந்த வாரம் பங்களாதேஷுக்குச் சென்றிருந்தனர்.

எனினும் இந்தத் திட்டம் அனைத்துலகச் சமூகத்தினரிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

2017ஆம் ஆண்டு நடந்த ராணுவ ஒடுக்குமுறையின்போது ரொஹிஞ்சா அகதிகள் நாட்டை விட்டு வெளியேறினர்.

அவர்களை மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவர, எந்த உண்மையான நோக்கமும் இல்லை என்று மனித உரிமைக் குழுக்கள் கருதுகின்றன.

மியன்மாரில் நீடிக்கும் அரசியல் நெருக்கடி அகதிகளுக்குப் பாதுகாப்பை அளிக்காது என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அகதிகள் அமைப்பு சொல்கிறது.

அகதிகளுக்கும் பாதுகாப்பு நிலவரம் கவலையளிக்கிறது.

மியன்மாருக்குத் திரும்பினால் தங்களது உரிமைகள் பறிபோகலாம் என்று சிலர் அஞ்சுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்