46 வயதில் மீண்டும் களமிறங்கும் ரொனால்டினோ
படம்: Reuters/Maria Alejandra
This audio is generated by an AI tool.
பிரபல காற்பந்து விளையாட்டாளர் ரொனால்டினோ இத்தாலியின் ரவென்னா (Ravenna) குழுவில் சேர்ந்துள்ளார்.
அவர் கடைசியாக 2015ஆம் ஆண்டு ஃபுலுமினன்ஸ் (Fluminense) குழுவில் விளையாடினார்.
அதன் பின்னர் அவர் ஓய்வுபெற்றுவிட்டார்.
பிரேசிலைச் சேர்ந்த ரொனால்டினோ 17 ஆண்டுகள் காற்பந்துப் போட்டிகளில் பங்கெடுத்தார்.
இளைய தலைமுறையினர் தங்கள் கனவை நோக்கிச் செல்ல ஊக்குவிக்க விரும்புவதாக அவர் சொன்னார்.
இத்தாலியின் எமிலியா ரொமக்னா (Emilia-Romagna) பகுதியில் உள்ள ரவென்னா ஒரு சிறிய காற்பந்துக் குழு.
அதன் அரங்கத்தில் சுமார் 12,000 பேர் அமர வசதியுள்ளது.
46 வயது ரொனால்டினோவின் வருகையால் ரவென்னா பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரவென்னா குழுவில் சேர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் கூறினார்.
அதன் உரிமையாளரான இக்னாசியோ சிப்ரியானி (Ignazio Cipriani) தமது பல ஆண்டுக் கால நண்பர் என்றும் அவர் சொன்னார்.