Skip to main content
"நிச்சயம் 1,000 கோல் அடிப்பேன்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"நிச்சயம் 1,000 கோல் அடிப்பேன்"- நம்பிக்கையுடன் ரொனால்டோ

வாசிப்புநேரம் -
"நிச்சயம் 1,000 கோல் அடிப்பேன்"- நம்பிக்கையுடன் ரொனால்டோ
(படம்: Reuters/Stringer)
பிரபல காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) 1,000 கோல்களைப் புகுத்தும் தமது குறிக்கோளில் இன்னும் உறுதியாய் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது சவுதி அரேபியாவின் அல்-நாசர் (Al-Nassr) குழுவில் விளையாடும் அவர் இதுவரை நாட்டுக்காகவும் குழுக்களுக்காகவும் மொத்தம் 956 கோல்களைப் புகுத்தியுள்ளார்.

இன்னும் ஓராண்டு அல்லது ஈராண்டு மட்டுமே அவர் காற்பந்து விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து விளையாடுவது சிரமமாக இருந்தாலும் குறிக்கோளை அடைவதில் உறுதியாய் இருப்பதாக அவர் சொன்னார்.

துபாயில் நடைபெற்ற Globe Soccer விருது நிகழ்ச்சியின்போது 40 வயது ரொனால்டோ அதனைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அவருக்கு மத்திய கிழக்கின் சிறந்த விளையாட்டாளர் என்ற விருது வழங்கப்பட்டது.

தொடர்ந்து 2ஆவது ஆண்டாக அவர் அந்த விருதைப் பெறுகிறார்.

காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றால் கண்டிப்பாக 1,000 கோல்களை எட்டிவிடுவேன் என்று போர்ச்சுகலைச் சேர்ந்த ரொனால்டோ நம்பிக்கையுடன் கூறினார்.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்