Skip to main content
காணாமல் போன ஆகாயப்படை வீரர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

காணாமல் போன ஆகாயப்படை வீரர் - காதலி வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டார்

வாசிப்புநேரம் -
மலேசியாவில் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதியிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட அரச மலேசிய ஆகாயப்படை வீரர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

முகமது அமர் முகமது அரிஃபின் (Muhammad Ammar Mohd Ariffin) எனும் அந்த 27 வயது ஆடவர் அம்பாங் ஜெயாவிலுள்ள (Ampang Jaya) தமது காதலியின் வீட்டிலிருப்பது உறுதிசெய்யப்பட்டது.

ராணுவ அதிகாரி ஒருவரின் வாகனத்தை மோதிவிட்டு பயத்தில் தலைமறைவானதாக அவர் காரணம் கூறியிருக்கிறார்.

அவர் இருக்கும் இடம் பற்றி பல்வேறு தரப்பினர் கொடுத்த தகவல் அடிப்படையில் காவல்துறை அவரைக் கண்டுபிடித்தது.

பயிற்சி ஒன்றில் கலந்துகொண்ட அமர் ஆகஸ்ட் 22ஆம் தேதி மற்ற பங்கேற்பாளர்களுடன் வீடு திரும்பினார்.

ஆகஸ்ட் 25ஆம் தேதி அவர் மீண்டும் பயிற்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் செல்லவில்லை. இதையடுத்து பயிற்சி மேலாளர் அமர் காணாமல் போனதாகப் புகார் தந்தார்.

அமரின் கைத்தொலைபேசியும் முடக்கப்பட்டிருந்தது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்