Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வயதானவர்கள்ளையும், உடல்நலமில்லாதோரையும் ராணுவச் சேவைக்கு அழைத்தது தவறு - ஒப்புக்கொண்ட ரஷ்யா

வாசிப்புநேரம் -

ரஷ்யா, வயதானவர்கள், உடல்நலமில்லாதோர், மாணவர்கள் ஆகியோரைக் கட்டாய ராணுவப்  போர்க்காலச் சேவைக்கு அழைத்தது தவறு என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது. 

தவறுகளைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அது சொன்னது. 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் சென்றவாரம், உக்ரேனியப் போரில் சண்டையிட படைத்திரட்டுக்கு அழைப்பு விடுத்தார். 

பொருத்தமான திறனும், ராணுவ  அனுபவமும் உள்ளவர்கள் மட்டுமே அழைக்கப்படுவர் என்று அவர் கூறியிருந்தார். 

இருப்பினும், சேவைக்குத் தகுதிபெறாதவர்களும் அழைக்கப்பட்டது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. 

வயதான, உடல்நலமில்லாத தமது தந்தை அழைக்கப்பட்டது குறித்து, பெண் ஒருவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட காணொளி வேகமாகப் பரவியது. 

உக்ரேனியப் போர் தொடங்கியது முதல், ரஷ்யா படைத்திரட்டு, தளவாட ஏற்பாடு ஆகியவற்றில் பல தவறுகளைச் செய்துவருவதாக மக்கள்  குறைகூறுகின்றனர். 

ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்